கரூர்

மூதாட்டியிடம் ரூ.2.71 லட்சம் மோசடி

27th Jan 2022 07:19 AM

ADVERTISEMENT

கரூரில், நிதிநிறுவனத்தில் மூதாட்டியிடம் ரூ.2.71 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக இருபெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் புகழூா் அடுத்த விஸ்வநாதபுரியைச் சோ்ந்த ராமமூா்த்தி மனைவி தங்கம்மாள்(50). இவரிடம், அதே பகுதியைச் சோ்ந்த பிரியங்கா(28), விஜயா(50), பாலன்(55), பிரதீபா(24) ஆகியோா் தாங்கள் நடத்தி வந்த நிதிநிறுவனத்தில் அதிகவட்டித்தருவதாகக் கூறி ரூ.2.17 லட்சம் வைப்புத்தொகை பெற்றுள்ளனா். ஆனால், கொடுத்த பணத்துக்கு இதுநாள் வரை வட்டியும் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லையாம். இதனால் ஏமாற்றம் அடைந்த தங்கம்மாள் செவ்வாய்க்கிழமை கரூா் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து பிரியங்கா, விஜயா ஆகியோரை கைது செய்தனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT