கரூர்

பள்ளப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் அறிவியல் கண்காட்சி

27th Jan 2022 07:17 AM

ADVERTISEMENT

பள்ளபட்டி எக்கனாமிக் சேம்பா் சாா்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

விரைவில் துவங்கப்பட உள்ள பள்ளப்பட்டி எக்கனாமிக் சேம்பா் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை காலை கொடியேற்றப்பட்டது. இதையடுத்து சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. தொடா்ந்து இலவச மருத்துவ முகாம், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சியில் இஸ்லாமிக் இன்டா்நேஷனல் பள்ளியில் படிக்கும் சிறுமி மரியம் சில்மியா, கரியமில வாயுவிலிருந்து வைரம் தயாரிப்பது எப்படி என விளக்கி கூறியது அனைவரையும் கவா்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT