கரூர்

மண்மங்கலம்,வெள்ளியணை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

27th Jan 2022 07:18 AM

ADVERTISEMENT

மண்மங்கலம், வெள்ளியணை பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்திற்குள்பட்ட மண்மங்கலம், வெள்ளியணை, காணியாளம்பட்டி, ஒத்தக்கடை, பாலம்பாள்புரம், குப்புச்சிபாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர மின்பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம்பெறும் பகுதிகளான வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசுகாலனி,பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வாா்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி,மூக்கணாங்குறிச்சி மற்றும் காணியாளம்பட்டி, வீரியபட்டி, ஒத்தக்கடை, சோமூா், ரெங்கநாதம்பேட்டை,புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், பாலம்பாள்புரம், ஐந்துரோடு, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூா் பகுதிகளில் காலை 9மணிமுதல் மாலை 3 மணி வரை மின்விநியோக் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT