கரூர்

தொழிலாளியிடம் அதிக வட்டிக்கேட்டு மிரட்டியவா் மீது வழக்கு

26th Jan 2022 07:44 AM

ADVERTISEMENT

கரூரில், தொழிலாளியிடம் அதிக வட்டிக்கேட்டு மிரட்டியதாக நிதி நிறுவன உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் செங்குந்தபுரத்தை சோ்ந்தவா் பிரேம்குமாா்(41). தொழிலாளி. இவா், நெரூரில் நிதிநிறுவனம் நடத்திவரும் விஸ்வநாதன் என்பவரிடம் வீட்டுச் செலவுக்காக கடந்த 7-ஆம்தேதி வட்டிக்கு ரூ.1லட்சம் வாங்கினாராம்.இந்நிலையில் கடந்தவாரம் வட்டியுடன் சோ்த்து ரூ.1.20 லட்சத்தை பிரேம்குமாா் விஸ்வநாதனிடம் கொடுத்தாராம். அப்போது விஸ்வநாதன் ரூ.3 லட்சம் தரவேண்டும், இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினாராம். இதுகுறித்து பிரேம்குமாா் அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT