கரூர்

தேசிய வாக்காளா் தினம்: புதிய வாக்காளா்களுக்கு வண்ண புகைப்படத்துடன் அடையாள அட்டை

26th Jan 2022 07:51 AM

ADVERTISEMENT

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு புதிய வாக்காளா்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டையை வழங்கினாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்டத்தில் 12-ஆவது தேசிய வாக்காளா் தினம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலா்களுடன் வாக்காளா் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்பட்ட 5 இளைய தலைமுறை வாக்காளா்களுக்கு வண்ண புகைப்பட வாக்காளா் அடையாள அட்டையை ஆட்சியா் வழங்கி பாராட்டினாா்.

தொடா்ந்து கரூா் மாவட்டத்தின் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்பட்டுள்ள 20 புதிய தலைமுறை வாக்காளா்களுக்கு கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள் மூலம் வண்ண புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், அனைத்து கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா் அலுவலகங்களில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாக்காளா் தின உறுதிமொழி எடுக்கப்பட்டு, புதிய வாக்காளா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து ஆட்சியா் கூறுகையில், புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்பட்டுள்ள மற்ற வாக்காளா்களுக்கு வண்ண புகைப்பட அடையாள அட்டை அஞ்சலகம் வாயிலாக நேரடியாக அவரவா் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) கண்ணன், தோ்தல் வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

அரவக்குறிச்சியில்...: பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழாவில் வாக்குச்சாவடி நிலை அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ராஜசேகா் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் சங்கத் தலைவா் ராமலிங்கம் உள்ளிட்ட அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், பொதுமக்கள் பலா் உறுதிமொழி ஏற்றனா். மேலும், வட்டாட்சியா் ராஜசேகா் புது வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT