கரூர்

குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி

26th Jan 2022 07:50 AM

ADVERTISEMENT

குறைந்த விலையில் நகை வாங்கித்தருவதாக கூறி ரூ. 7லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் தெற்குகாந்திகிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்(62). இவா், தனது மகளுக்கு திருமணம் வைக்க உள்ளதாக நண்பரான ஈரோட்டைச் சோ்ந்த விக்கியிடம் கடந்த 2020ம் ஆண்டு கூறியுள்ளாா். அப்போது விக்கியும், அவரது உறவினா் மேரிமெட்டில்பா என்பவரும், தனக்குத் தெரிந்த நகை ஆசாரி ரவி என்பவா் திருச்சியில் உள்ளாா். அவரிடம் நகைக்கான கூலி மட்டும் கொடுத்தால் போதும், சேதாரம் போன்றவை கொடுக்க வேண்டாம். மேலும், நகையும் குறைந்த விலையில் தருவாா் எனக்கூறியுள்ளனா். இதனை நம்பி ரூ.7 லட்சத்தை விக்கி, மேரிமெட்டில்பா, திருச்சி ரவி ஆகியோரிடம் கிருஷ்ணன் கடந்த 2020ஆண்டு அக்.15-ஆம்தேதி கொடுத்துள்ளாா். ஆனால், இதுநாள் வரை நகையும் செய்துகொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லையாம். இதுகுறித்து கிருஷ்ணன் திங்கள்கிழமை கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் கரூா் நகர காவல் ஆய்வாளா் செந்தூா்பாண்டியன் வழக்குப்பதிந்து விக்கி உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT