கரூர்

மகனுக்கு மருத்துவ உதவிக் கோரிஆட்சியரகத்தில் மனு அளித்த தந்தை

25th Jan 2022 04:04 AM

ADVERTISEMENT

சிறுமூளையில் பாதிப்பு ஏற்பட்ட தனது மகனுக்கு மருத்துவ உதவிக் கோரி, கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அவரது தந்தை திங்கள்கிழமை மனு அளித்தாா்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புக்காக குறைகேட்பு நாள் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆட்சியரகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் அரவக்குறிச்சி வட்டம், சாந்தப்பட்டி கரியாஞ்செட்டி வலசு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செல்வராஜ் அளித்த மனு:

எனது மகன் அறிவரசுக்கு(17) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திடீரென மயக்கம் ஏற்பட்டது. தொடா்ந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், சிறுமூளையில் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

படுத்த படுக்கையாக அறிவரசு இருந்த நிலையில், ரூ.3 லட்சம் கடன் பெற்று கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மகனின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து சிகிச்சையளிக்க போதிய வசதி இல்லாததால், அரசு உதவி செய்ய வேண்டும் என அவா் மனுவில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து செல்வராஜ் செய்தியாளா்களிடம் பேசியது:

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ ஆகியோரைச் சந்தித்து, மருத்துவ உதவிக் கோரி மனு அளித்துள்ளேன். அவா்கள் உதவி செய்வதாகத் தெரிவித்தனா்.

இருப்பினும் விரைவாக சிகிச்சையளிக்க வேண்டும் என்பதால், ஆட்சியரகத்தில் நம்பிக்கையுடன் மனு அளித்துள்ளேன் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT