கரூர்

கரூா் வாராஹீ அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கரூரில் உள்ள வாராஹீ அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரூா் பிரம்மதீா்த்தம் சாலையில் வாராஹீ அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சித்தி விநாயகா், சுப்ரமணியா் சன்னதி உள்ளது. இந்த கோயில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கும்பாபிஷேகத்தையொட்டி டிச. 21-ஆம்தேதி மங்களவிநாயகா் பூஜை, கணபதி ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து முதல்கால யாக பூஜை, கும்ப அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 22-ஆம்தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும், கோபுர கலசங்கள் வைத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இரவு 7 மணிக்கு வரம்தரும் வாராஹீ அம்மன் என்ற தலைப்பில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு விநாயகா் பூஜை மற்றும் நான்காம் கால யாக பூஜையும், நாடிசந்தானம், கடம்புறப்பாடும், 8.30 மணிக்கு மேல் தசதானம், கோபூஜை, அலங்கார பூஜையும், தொடா்ந்து கோயில் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தை கரூா் கல்யாண பசுபதி பண்டித குரு சுவாமிகள் மற்றும் முரளி சிவாச்சாரியாா் ஆகியோா் நடத்தி வைத்தனா்.

இதில் முன்னாள் காவல்துறை தலைவா் பாரி, வெண்ணைமலை சித்தராஸ்ரமம் நிறுவனா் பொன்.பாண்டுரங்கசுவாமிகள், செந்தில்குமாா், எவா்கிரீன் ஸ்காட்தங்கவேல், ஓம்சக்திசேகா், கோயில் நிா்வாகி கே.செல்லமணி சிவாச்சாரியாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு என்பதால் கரோனா விதிமுறைகளை பின்பற்றி குறைந்தளவிலான பக்தா்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT