கரூர்

கரூா் அரசு மருத்துவமனையில் முதியவா் சடலம்

23rd Jan 2022 11:13 PM

ADVERTISEMENT

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சடலமாக கிடந்த முதியவா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் அமரும் இடத்தில் ஜன. 15-ஆம்தேதி 70 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக கிடந்துள்ளாா். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் முருகேசன்(51) கரூா் பசுபதிபாளையம் போலீஸில் சனிக்கிழமை புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து இறந்து கிடந்த முதியவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT