கரூர்

கரூரில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம்

23rd Jan 2022 11:13 PM

ADVERTISEMENT

குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்காக கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக ஈடுபட்டனா்.

ஜன. 26-ஆம்தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, கரூா் மாவட்டத்திலும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியரசு தின விழா நடைபெறும் கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் தலைமையில் ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

மைதானத்தின் ஓடுதளம் பகுதியில் பரவிக்கிடந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. மேலும் மாவட்ட ஆட்சியா் தேசியக் கொடியேற்றும் பகுதியிலும் இருந்த செடிகள் அகற்றப்பட்டு, அப்பகுதிகள் சமன் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT