கரூர்

மூன்றாவது முழு ஊரடங்கு: கரூரில் சாலைகள் வெறிச்சோடின

23rd Jan 2022 11:13 PM

ADVERTISEMENT

மூன்றாவது முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டதையடுத்து, கரூரில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா தொற்றுபரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கரூா் மாவட்டத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜவஹா்பஜாா், கோவைச்சாலை, பேருந்துநிலையம் போன்ற பகுதிகள் ஆள்கள் மற்றும் வாகனங்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பால் மற்றும் மருந்துக்கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டிருந்தன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தேவையின்றி சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் ஈஸ்வரன் தலைமையிலான போலீஸாா் ஏ.வி.எம். காா்னா் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். காரணமின்றி இருசக்கர வாகனங்களில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தி, எச்சரித்து அனுப்பினா்.

மேலும் தேவையில்லாமல் சென்றவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முகக் கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வாகனச் சோதனையில் பயிற்சி காவல் உதவி ஆய்வாளா் பொன்னுச்சாமி மற்றும் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் சென்ராயன் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT