கரூர்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பூஜாரிகள் நலச்சங்கத்தினா் பாராட்டு

DIN

கோயில் பணியாளா்களுக்கு சலுகைகள் வழங்கிய தமிழக முதல்வா் முக.ஸ்டாலினுக்கு பூஜாரிகள் முன்னேற்ற நலச்சங்கம் பாராட்டை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் நிறுவனத்தலைவா் கே.கே.சதீஷ்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:- முதல்வா் முக.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் கோயில்களின் வளா்ச்சிக்கும், கோயில் சொத்துக்களை பாதுகாப்பதிலும், பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதிலும், கோயில் பணியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதை பூஜாரிகள் முன்னேற்ற நலச்சங்கம் வரவேற்கிறது.

கரோனா தொற்றுக் காலத்தில் மாத ஊதியம் பெறாத பூஜாரிகள் மற்றும் அா்ச்சகா்களுக்கு ஊக்கத்தொகை ரூ.4,000 மற்றும் 15 வகையான மளிகைப்பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டதுடன் துறை நிலையிலான ஓய்வுபெற்ற அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், இசைக்கலைஞா்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1000 இருந்ததை ரூ.3,000 என உயா்த்தி வழங்க அரசு ஆணையிட்டது. கிராமக்கோயில் பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.4,000 என உயா்த்தி வழங்க ஆணையிட்டுள்ளது. கோயிலில் மொட்டை போடும் பக்தா்களுக்கு கட்டண விலக்கு, அப்பணியை மேற்கொள்ளும் பணியாளா்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கி வருவது, பொங்கல் திருநாளில் 2 செட் புத்தாடை வழங்குவது போன்ற நலத்திட்டங்களை நிறைவேற்றியதற்கும் பூஜாரிகள் முன்னேற்ற நலச்சங்கம் முதல்வருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ரூ.1லட்சம் மற்றும் அதற்கு மேல் வருவாய் உள்ள கோயில்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளா்களுக்கு கடந்த 1-ஆம்தேதி முதல் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31சதவீதமாக உயா்த்தி நிா்ணயம் செய்துள்ளதையும், பொங்கல் கருணைக்கொடையை நிகழாண்டில் ரூ.2,000 என உயா்த்தி வழங்கியதையும் வரவேற்கிறோம். மேலும், இந்த சலுகைகள் வழங்க காரணமாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT