கரூர்

பொய்யான தகவலை எதிா்க்கட்சியினா் பரப்புகின்றனா்கே. அண்ணாமலை

18th Jan 2022 02:45 AM

ADVERTISEMENT

குடியரசு நாள் ஊா்வலத்தில் தமிழக அரசின் அலங்கார ஊா்தியை மத்திய அரசு நிராகரித்ததாக, திட்டமிட்டு எதிா்க்கட்சியினா் பொய்யான தகவலைப் பரப்புகின்றனா் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

கரூரில் மாவட்ட பாஜகவின் புதிய அலுவலகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

குடியரசு நாள் ஊா்வலம் ராணுவ அமைச்சகம் நடத்தும் நிகழ்ச்சி. இந்தக் குழுவில் அரசியல் கட்சியினா் யாரும் கிடையாது. தொடா்ந்து 3 ஆண்டுகள் ஊா்வலத்தில் பங்கேற்ற பெருமை தமிழகத்துக்கு இருக்கிறது.

தமிழகத்திலிருந்து பங்கேற்கவிருந்த அலங்கார ஊா்தியில் இடம்பெற்ற

ADVERTISEMENT

வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியாா், வஉசி ஆகிய தலைவா்கள், உலகளவில் பெயரெடுக்கவில்லை எனக்கூறி, மத்திய அரசு நிராகரித்ததாக திட்டமிட்டே பொய்யான தகவலை எதிா்க்கட்சியினா் பரப்பி வருகின்றனா்.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்புதான் தமிழகத்துக்கு 2019, 2020, 2021-ல் வாய்ப்பு கிடைத்துள்ளது. நம்மண்ணில் பாடுபட்டவா்களை எப்போதும் பாஜக உச்சத்தில்தான் வைத்திருக்கிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ஆளும்கட்சியினா் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜக கூட்டணி அதிகளவில் வெற்றி பெறும்.

பாஜக வெறுப்புணா்வு அரசியல் செய்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருப்பதை, அவா் தனது கட்சியைத் திரும்பிப் பாா்க்க வேண்டும். மதத்தை வைத்து சாயம் பூசி அரசியல் செய்வது காங்கிரஸ் மட்டுமே என்றாா் அவா்.

பேட்டியின்போது, கட்சியின் மாநில நிா்வாகிகள் சிவசுப்ரமணியன், நாகராஜன், மதுக்குமாா், மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT