கரூா் மாவட்டம், தேவா்மலையில் சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.
தேவா்மலை குடிவெண்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிலா் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சிந்தாமணிப்பட்டி
காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் காவல்துறையினா் அங்கு சென்று சோதனையிட்டு, சேவல்களை வைத்து
ADVERTISEMENT
சூதாட்டத்தில் ஈடுபட்ட செம்பியாநத்தம் பெரியசாமி(60), பொன்னுசாமி(56), பிச்சைமணி(31) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
மேலும் அவா்களிடமிருந்து இரு சேவல்கள், சூதாட்டப்பணம் ரூ.2,410 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.