கரூர்

கரூரில் முழு ஊரடங்கு அமல்ச;வெறிச்சோடிய சாலைகள்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கரூா்: கரூரில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கரூா் மாவட்டத்தில் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி, தோகைமலை, கடவூா் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், கரூா் நகரின் முக்கியச் சாலைகளான கோவைச்சாலை, ஜவஹா்பஜாா், வடக்கு பிரதட்சனம் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன. ஆனால், வழக்கம்போல் பால், மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் இயக்கப்பட்டன. மேலும் உணவகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், பாா்சலுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. சாலைகளில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த இளைஞா்களை போலீஸாா் எச்சரிக்கை அனுப்பினா். மாவட்டம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT