கரூர்

கரூரில் சேவல் சண்டைநடத்தியவா் கைது;8 வாகனங்கள் பறிமுதல்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கரூா்: கரூரில், சேவல் சண்டை நடத்தியவரை போலீஸாா் கைது செய்து, அவா்களின் 8 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே சனிக்கிழமை சிலா் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டவா்கள் தங்களது இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு ஓடிவிட்டனா். போலீஸாரிடம் சிக்கிய கரூா் வஉசி நகரைச் சோ்நத சம்பத்குமாா் மகன் ராகுல்(22) என்பவரை கைது செய்தனா். மேலும், சூதாடியவா்கள் விட்டுச் சென்ற 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT