கரூர்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 போ் கைது

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கரூா்: தரகம்பட்டி, சரக்காம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 11 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.63,130 ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம் தரகம்பட்டி, சரக்காம்பட்டி பகுதியில் பணம் வைத்து சனிக்கிழமை இரவு சிலா் சூதாடுவதாக சிந்தாமணிப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டனா்.

அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கடவூா் அம்மாபட்டியைச் சோ்ந்த சக்திவேல்(31), ஞானசேகா்(41), முத்துசாமி(40), சரக்காம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம்(55), சுப்ரமணி(47), வேலுசாமி(42) உள்பட 11 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த சூதாட்டப் பணம் ரூ.63,130-ஐ பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT