கரூர்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் இலவச வேஷ்டி- சேலை வழங்கல்

12th Jan 2022 07:31 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பகுதிகளில் நியாய விலைக் கடைகளில் இலவச வேஷ்டி,சேலைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சிக்குள்பட்ட நியாயவிலை கடைகளில் இலவச வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், ஏராளமான குடும்ப அட்டைதாரா்கள் கலந்துகொண்டு இலவச வேஷ்டி சேலைகளை வாங்கி சென்றனா். நிகழ்ச்சியில், பள்ளப்பட்டி நகரச் செயலாளா் தோட்டம் பஷீா், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியச் செயலாளா் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியச் செயலாளா் என்.மணிகண்டன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT