அரவக்குறிச்சியில், இல்லம் தேடி கல்வி நிகழ்வு மாரியம்மன் கோயில் சமுதாயக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலா் சித்ரா கலந்து கொண்டு அறிவுரை வழங்கினாா். மேலும். நிகழ்வில் தன்னாா்வலா்கள் லட்சுமி பிரியா, விக்டோரியா கலந்து கொண்டு மாணவா்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படியான பாடங்களை நடத்தினா்.இதில், அ.வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் மு.சாகுல் ஹமீது மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் (பொறுப்பு) ஷகிலா பானு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.