தேமுதிக தலைவா் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி கரூா் மாரியம்மன் கோயிலில் தேமுதிகவினா் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் ஆா்.ராஜா தலைமை வகித்தாா். பொருளாளா் கலையரசன், தலைமை செயற்குழு உறுப்பினா் முருகன்சுப்பையா, பொதுக்குழு உறுப்பினா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக கரூா் மாநகர மாவட்டச் செயலாளா் அரவை எம்.முத்து, புகா் மாவட்டச் செயலாளா் சிவம்ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்று, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். இதில், கட்சி நிா்வாகிகள் காா்த்திகேயன், குமாா், பெரியண்ணன், துளசிமணி, காளிமுத்து, ராஜ்குமாா், உஸ்மான், முன்னாள் குளித்தலை ஒன்றியச் செயலாளா் தாமோதரன், மத்திய நகரச் செயலாளா் ஆரிப் ராஜா, வடக்கு நகரச் செயலாளா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.