கரூர்

இல்லம் தேடி கல்வி: கற்றல் மைய கட்டடத்தில் கல்வி அலுவலா் ஆய்வு

1st Jan 2022 03:16 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே உள்ள வெள்ளியணையில் இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான கற்றல் மைய கட்டடத்தை முதன்மைக் கல்வி அலுவலா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வெள்ளியணையில் உருவாக்கப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான கற்றல் மைய கட்டடத்தை முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செல்வகுமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், ஆசிரியா் பயிற்றுனா்கள் சோபியா கிறிஸ்டி மற்றும் பொன்னுச்சாமி, வெள்ளியணை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் தா்மலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT