வெள்ளியணை லயன்ஸ் சங்கம் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கரூா் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளியணை லயன்ஸ் சங்கம், கரூா் மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில், கண்ணில் ஏற்படும் குறைகளான கண் புரை, கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, தலைவலி, சதைவளா்ச்சி, கண்ணில் நீா் வடிதல், நீா் அழுத்தம், உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருத்துவ குழுவினா் ஆலோசனை வழங்குகின்றனா்.
காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் முகாமில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு வெள்ளியணை லயன்ஸ் சங்கம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.