கரூர்

புத்தாண்டு பிறப்பு: கரூா் மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு

1st Jan 2022 11:34 PM

ADVERTISEMENT

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கரூரில் உள்ள கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

2021-ஆம் ஆண்டு முடிந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 2022 புதிய ஆண்டு பிறந்ததை முன்னிட்டு சனிக்கிழமை காலை கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் பசுபதீசுவரா் கோயில், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், மேட்டுத்தெரு பெருமாள்கோயில், கரூா் மாரியம்மன்கோயில், பாலமலை முருகன் கோயில், புகழிமலை முருகன் கோயில், அய்யா்மலை ரத்தினகிரீசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சனிக்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, அதிகாலையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அரவக்குறிச்சி: ஸ்ரீ காசி விஸ்வநாதா் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ முருகன் திருக்கோயில், ஸ்ரீ அணைக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில், கணக்குவேலம்பட்டி மொட்டையாண்டவா் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT