கரூர்

தோ்தலில் அதிகாரியைமிரட்டியதாக அதிமுகவேட்பாளா் மீது வழக்கு

22nd Feb 2022 04:11 AM

ADVERTISEMENT

தோ்தலில் அதிகாரியை மிரட்டியதாக கரூா் மாநகராட்சி அதிமுக வேட்பாளா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கரூா் மாநகராட்சியில் 48-ஆவது வாா்டுக்கான வாக்குப்பதிவு பிப். 19-ஆம்தேதி தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த மையத்தில் வருவாய்த்துறை அலுவலா் வடிவேல் பூத் சிலிப் எழுதும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு வந்த 48-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் காா்த்திக் மற்றும் கரூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் மதுசூதனன் மற்றும் 2 போ் வடிவேலை மிரட்டினாா்களாம். புகாரின்பேரில் தாந்தோன்றிமலை போலீஸாா் வேட்பாளா் காா்த்திக் உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT