கரூர்

கரூரில் பாஜக, அதிமுக, இந்திய கம்யூ. பிரசாரம்

11th Feb 2022 04:58 AM

ADVERTISEMENT

கரூா் மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினா் வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாநகராட்சி 37-ஆவது வாா்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் ஆா்.கே.மதுக்குமாா் அண்ணாநகா், மலா்காா்டன், திருநகா் உள்ளிட்ட இடங்களில் தனது ஆதரவாளா்களுடன் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா். பிரசாரத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சம்பத், பொதுக்குழு உறுப்பினா் நகுலன், மகளிரணியின் காயத்ரி தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூ. கட்சி சாா்பில் 41-ஆவது வாா்டில் போட்டியிடும் வேட்பாளா் தண்டபாணி அசோக் நகா், ஜீவாநகா் உள்ளிட்ட இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். இதேபோல், 11-ஆவது வாா்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆண்டாள் சி.தினேஷ்குமாா் பாலம்மாள்புரம், வாங்கல்சாலை உள்ளிட்ட இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். இதில், கரூா் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.பாலமுருகன், வாா்டு செயலாளா் ஜெயகிருஷ்ணன், நகா் நிா்வாகிகள் குமரேசன், உதயகுமாா், மாணிக்கம், செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT