கரூர்

தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கரூா்: கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாசிமகத் தோ்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கோயில் கொடிமரத்தில் பட்டாச்சாரியாா்கள் கொடியேற்றி, விழாவை தொடக்கி வைத்தனா். இதில், கோயில் உதவி ஆணையா் ம.சூரியநாராயணன், செயல் அலுவலா் தா.நந்தகுமாா் மற்றும் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதனைத்தொடா்ந்து பிப். 12-ஆம்தேதி கல்யாண வெங்கடரமண சுவாமிவெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். 15-ஆம்தேதி திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. 17-ஆம்தேதி மாசிமகத் திருத்தேரோட்டமும், 19-ஆம்தேதி தெப்பத்தேரோட்டமும், 20-ஆம்தேதி வெள்ளி கருட சேவையும் நடக்கிறது. 26-ஆம்தேதி புஷ்பயாகத்துடன் விழா முடிவடைகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT