கரூரில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா ஆா்.எம்.எஸ். அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோ.ராஜசேகா் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சக்திவேல், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் ராஜசேகா், சிஐடியு மாவட்டச் செயலாளா் முருகேசன், தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளா் சுடா்வளவன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் வடிவேலன் உள்ளிட்டோா் உரையாற்றினா்.
இதில், இந்திய உழவா்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்ற தவறிய மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் பங்கேற்றனா்.