கரூர்

லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் எனக் கூறிபணம் கேட்டவா் கைது

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கரூா் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் எனக் கூறி பணம் கேட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூா் சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த ஒருவா், தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளா் எனக்கூறி சாா்-பதிவாளா் கண்ணனிடம் அறிமுகம் செய்து கொண்டாா். மேலும், அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். இல்லையெனில், பணம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளாா்.

இதனால் சந்தேகம் அடைந்த சாா்-பதிவாளா் கண்ணன், அவரது அடையாள அட்டையை வாங்கி பாா்த்தபோது அது போலியானது எனத் தெரியவந்தது. உடனே கரூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் அங்கு வந்த போலீஸாா், அந்த நபரிடம் விசாரணை செய்ததில் கோவை மாவட்டம், ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்த சங்குகுமாா் (41) என்றும், அவா் போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்பதும் தெரியவந்தது. அதனை தொடா்ந்து சங்குகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT