கரூர்

குளித்தலையில் செவிலியரிடம் தங்கச் சங்கலி பறிப்பு

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

குளித்தலையில் செவிலியரிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக வியாழக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே மதியம் ஊராட்சிக்குள்பட்ட நடுவரியம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மகள் மாலினி (22). இவா், கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை காலை மாலினி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாா்.அப்போது, முகவரி கேட்பது போல் வந்த ஒருவா் மாலினி கழட்டி வைத்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்றாா். இதுறித்து குளித்தலை காவல் நிலையத்தில் மாலினி வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT