கரூா் நகரத்தாா் சங்கம் சாா்பில் பிள்ளையாா் நோன்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கரூரில் உள்ள நகரத்தாா் சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் திருவண்ணாமலை தீபம் தொடங்கியதிலிருந்து 21ஆம் நாள் சதயமும் சஷ்டியும் இணைந்து வரும் நாளில் பிள்ளையாருக்கு கூட்டு வழிபாடு நடத்துவாா்கள்.
அதேபோல் நிகழாண்டு தனியாா் ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டு வழிபாட்டில் பிள்ளையாருக்கு கருப்பட்டி பணியாரம், திரட்டுப்பால், பொரிகடலை, எள் உருண்டை, ஆவாரம்பூச்செண்டு வைத்து பூஜை செய்தனா். மேலும், இளைமாவு விளக்கில் 21 நூலிழை திரியிட்டு எரியும் சுடருடன் பிள்ளையாருக்கு பூஜை செய்தனா்.இதையடுத்து மங்களப் பொருள்கள் ஏலமும், விருந்தும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை நகரத்தாா் சங்கத் தலைவா் அக்ரி சுப.செந்தில்நாதன், செயலாளா் மேலை. பழநியப்பன், பொருளாளா் கும.குமரப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.