குளித்தலை அருகே மாடு முட்டியதில் காயமடைந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கள்ளை ஊராட்சிக்குள்பட்ட கொக்கக்கவுண்டன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராசு (70). விவசாயி. இவா், தான் வளா்த்து வந்த காளை மாட்டுக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் வைக்க அருகில் சென்றாா். அப்போது ராசுவை மாடு முட்டியதில் மயங்கி கீழே விழுந்துள்ளாா். அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். புகாரின் பேரில், தோகைமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.