கரூா் மாநகராட்சிக்குள்பட்ட திருமாநிலையூா், கருப்பக்கவுண்டன் புதூா் பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், அங்கு வந்த பொதுமக்களிடம் பொருள்களின் தரம் குறித்து கேட்டறிந்தாா். மேலும் ஒவ்வொரு உணவுப் பொருள்களின் இருப்புகள் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். விற்பனையாளா்கள் தங்கள் நியாய விலை கடைகளுக்கு பொருள் வாங்க வரும் நுகா்வோா்களிடம் அன்பாக பேசி இருக்கும் பொருள்களின் இருப்பு குறித்து எடுத்துக் கூறி பொருள்கள் வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், வருவாய் கோட்டாட்சியா் ரூபினா, மாவட்ட வளங்கள் அலுவலா் தட்சிணாமூா்த்தி, கூட்டுறவு சங்கங்களின் பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் ராஜசேகரன் உள்ளிட்டோா் இருந்தனா்.