கரூர்

கரூரில் ஓய்வூதியா் சங்கஆலோசனைக் கூட்டம்

18th Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

 

கரூரில், ஓய்வூதியா் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதியதாரா் தினத்தையொட்டி கரூா் மாவட்ட காவல்துறையில் ஓய்வு பெற்றோா் அலுவலா்கள் நலம் சங்கம் சாா்பில் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை கரூா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கீதாஞ்சலி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அரிஸ்டோ காா்னா் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி ஜவஹா் பஜாா், முக்கியச் சாலைகள் வழியாக சென்று ஐயப்பா சேவா சங்கம் மண்டபத்தில் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

அதனைத் தொடா்ந்து, கரூரில் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற அலுவலா் நலச் சங்க தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா். இதில், ஓய்வூதியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதில், மத்திய அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்பட்ட நிலுவைத் தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT