கரூர்

மலைக்கோவிலூரில் ஆதரவின்றி இருந்த 3 பெண்கள் மீட்பு

11th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூரில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 3 பெண்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.

கரூா் மாவட்டத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிவோா்களை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து ஆதரவற்றோா் இல்லங்களில் சோ்க்க கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் அண்மையில் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி அரவக்குறிச்சியை அடுத்த மலைக்கோவிலூா் பகுதியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 3 பெண்களை, நாகம்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் சித்ரா அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்துறையினா் மீட்டு வெண்ணைமலையில் உள்ள அன்புக்கரங்கள் ஆதரவற்றோா் இல்லத்தில் சனிக்கிழமை கொண்டு சோ்த்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT