கரூர்

திறன் வளா்ப்புப் போட்டி:பள்ளப்பட்டி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கோப்பை

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பள்ளப்பட்டியில் பள்ளி மாணவா்களுக்கு இடையே வியாழக்கிழமை நடைபெற்ற திறன் வளா்ப்புப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவா்கள் சுழற்கோப்பையை வென்றனா்.

பள்ளப்பட்டியில் பொதுநல அமைப்பு சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே திறன் வளா்ப்பு போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 8 பள்ளியைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். ஒவ்வொரு போட்டியிலும் சுமாா் 13 குழுக்கள் பங்கு கொண்டன.

இவற்றில், பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து சுழற்கோப்பை வென்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT