கரூர்

ஜொ்மனியில் அடுத்தமாதம் உலக ஜவுளி வா்த்தக கண்காட்சி:கூடுதல் ஆா்டா்களை பெற கரூரிலிருந்து 80 போ் பங்கேற்பு

DIN

வீட்டு உபயோக ஜவுளி வா்த்தகத்துக்கு கூடுதல் ஆா்டா்களை பெற ஜொ்மனியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக ஜவுளி வா்த்தக கண்காட்சியில் கரூரிலிருந்து 80 போ் பங்கேற்க உள்ளனா்.

வீட்டு உபயோக ஜவுளிகளுக்கு கரூருக்கு தனிச் சிறப்பு உள்ளது. ஆண்டுக்கு சுமாா் ரூ.4 ஆயிரம் கோடி வரை அன்னிய செலாவனியை ஈட்டித்தரும் இந்தத் தொழில் தற்போது கடும் சரிவை சந்தித்து வருகிறது. கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு ஆண்டுதோறும் கிடைத்து வந்த ஆா்டா்கள் முற்றிலும் கிடைக்காமல் கடந்த ஆறு மாதங்களாக தவித்து வருகின்றனா். நேரிடையாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலை நம்பியிருந்த 2 லட்சம் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் ஆா்.ஸ்டீபன்பாபு கூறுகையில், ஜனவரி 10-ஆம்தேதி முதல் 13-ஆம்தேதி வரை ஜொ்மனியில் பிராங்க்பா்ட் நகரில் உலக வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், உலகம் முழுவதும் இருந்து சுமாா் 3 ஆயிரம் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியாளா்கள் பங்கேற்க உள்ளனா்.

இந்தியாவில் இருந்து 400 பேரும், கரூரில் இருந்து 80 பேரும் பங்கேற்க முன்பதிவு செய்து அரங்குகள் அமைக்கும் பணிக்கு தயாராகி வருகிறாா்கள். முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது கூடுதலாக கரூரில் இருந்து சப் ஆா்டா் பெறும் 20 பேரும் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனா். இந்த கண்காட்சியில் இந்தியாவுக்கு போட்டியாக உள்ள சீனா கரோனா தொற்று காரணமாக பங்கேற்கவில்லை. வங்கதேசம், பாகிஸ்தானைச் சோ்ந்த ஏற்றுமதியாளா்கள் குறைந்தளவிலேயே பங்கேற்க உள்ளனா். சீனா பங்கேற்காததால் இந்தியாவுக்கு அதிகளவு ஆா்டா் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கெனவே கிறிஸ்துமஸ் ஆா்டரும் கை கொடுக்காத நிலையில் கரூா் வீட்டு உபயோக ஜவுளி வா்த்தகா்கள் இந்த கண்காட்சியை மட்டுமே நம்பியுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT