கரூர்

சாலையோரத்தில் வீசப்படும் குப்பைகளை அகற்ற கோரிக்கை

7th Dec 2022 01:00 AM

ADVERTISEMENT

கரூா் -ஈரோடு சாலையோரத்தில் வீசப்படும் குப்பைகளால் சுகாதாரக்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா்-ஈரோடு சாலையில் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குள்பட்ட கோதைநகா் உள்ளது. இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேமிக்க ஈரோடு சாலையில் கரூா் மாநகராட்சி சாா்பில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைத்தொட்டியை அப்பகுதியினா் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை போட்டு வருகிறாா்கள்.

இதனிடையே கடந்த ஒரு மாதமாக குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளை எடுத்துச் செல்ல மாநகராட்சி வண்டிகள் வரவில்லை என அப்பகுதியினா் குற்றம்சாட்டி வருகின்றனா்.

இதனால் குப்பைகள் சாலையோரத்தில் கிடப்பதால் துா்நாற்றம் வீசி அப்பகுதியினரிடையே சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, நாள்தோறும் குப்பைத்தொட்டியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி குப்பை வண்டிகள் எடுத்துச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT