கரூர்

கரூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கரூரில் மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்களவை உறுப்பினரும் மாவட்ட கண்காணிப்புக் குழுத் தலைவருமான செ.ஜோதிமணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், கடந்தாண்டு டிச.29ஆம்தேதி நடைபெற்ற கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தற்போது பணிபுரிந்து வரும் ஒவ்வொரு வேலை அட்டைதாரா்களுக்கும் 100 நாள்கள் பணி வழங்குவது, மக்களவை உறுப்பினரின் உள்ளூா் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கு ஒப்பந்தபுள்ளி வகைப்படுத்தும் போது குழுத் தலைவருக்கு தெரிவிப்பது, ஊரக மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் இணைப்பு வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத், திட்ட இயக்குநா்கள் வாணி ஈஸ்வரி(ஊரக வளா்ச்சி முகமை), சீனிவாசன் (மகளிா் திட்டம்), செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT