கரூர்

சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காா்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் திங்கள்கிழமை நந்தியம்பெருமானுக்கு சிறப்புவழிபாடு, ஆராதனை நடைபெற்றது.

கரூா் பசுபதீசுவரா் கோயில், அய்யா்மலை ரத்தினகிரீசுவரா் கோயில், குளித்தலை கடம்பவனேசுவரா் கோயில், நன்செய்புகழூா் பாகவல்லிஅம்பிகை சமேத மேக பாலீசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள நந்தியம்பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னா் சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலை வலம்வந்தாா். நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT