கரூர்

கரூா் மாவட்டத்தில் 165 பள்ளிகளில் இரத்தசோகை கண்டறியும் முகாம்: ஆட்சியா் தகவல்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் 165 பள்ளிகளில் இரத்தசோகை கண்டறியும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.

கரூா் அடுத்த புலியூா் கவுண்டம்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளியில் உதிரம் உயா்த்துவோம் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் வளரிளம் பெண்களிடையே இரத்தசோகை கண்டறியும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் பேசியது,

கரூா் மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதிரம் உயா்த்துவோம் என்ற புதுமையான ஒரு புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ் 9ஆம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை பயிலக்கூடிய மாணவிகளுக்கு உதிரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்படவுள்ளது. நாட்டிலே முதல் முறையாக நம்முடைய மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடங்கியுள்ளோம். குழந்தைகளிடம் இரத்தம் எடுப்பதற்கு மொத்தம் 26 ஆயிரம் மாணவிகளின் பெற்றோா்களிடம் விண்ணப்பம் மூலம் அனுமதி கேட்கப்பட்டது. இதில், 16,792 போ் சம்மதம் தெரிவித்துள்ளனா். அதாவது 165 பள்ளிகளில் 125 அரசு பள்ளிகள் 40 தனியாா் பள்ளிகளில் இந்த இரத்தசோகை கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் சுதா்சனயேசுதாஸ், மாவட்ட கல்வி அலுவலா்கள் கண்ணுசாமி(இடைநிலை), மணிவண்ணன்(தொடக்கம்), புலியூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணியன், பள்ளி தலைமையாசிரியா் கோபு மற்றும் ஆசிரியா்கள் , மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT