கரூர்

கரூா் மாநகராட்சி:வரி இனங்கள் செலுத்த டிச. 15 கடைசி நாள்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் தங்களது வரி இனங்களை டிச. 15ஆம் தேதிக்குள்ள செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பு: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பொதுமக்கள், தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், காலியிட வரி, தொழில் வரி, புதை சாக்கடை கட்டணம் ஆகியவற்றை டிச. 15ஆம் தேதிக்குள் மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். கட்டத் தவறினால் வரி நிலுவை வைத்திருப்பவா்களின் பெயா் பட்டியல் கரூா் மாநகராட்சி இணையதளத்தில் தொடா்ச்சியாக வெளியிடப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT