கரூர்

புகழூா் ராஜகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழா

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புகழூா் அன்னை நகா் ராஜகணபதி கோயிலில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், புகழூா் அன்னை நகா் ராஜ கணபதி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக யாக வழிபாடும், தொடா்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்தனா். தொடா்ந்து மாலை 6 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடு, கலசங்கள் யாகசாலைக்கு எழுந்தருளல், முதல்கால யாக பூஜையும் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு மேல் புதிய ராஜகணபதி அதிவாஸம், கண் திறப்பு பூஜைகள் மற்றும் கோபுரம் கண் திறந்து கலசம் வைத்தல், நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைதொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடும், இரண்டாம் கால யாக பூஜையும், கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு மேல் கோபுர கலசத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சிவாச்சாரியாா்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றினா். இதில், சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT