கரூர்

‘திருக்குறள்  படித்தால் கவலைகள் தீரும்’

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குறள் படித்தால் கவலைகள் தீரும் என்றாா் அகில இந்திய வானொலி நிகழ்ச்சியின் முன்னாள் இயக்குனா் முனைவா் சுந்தர ஆவுடையப்பன்.

தமிழக அரசு அண்மையில் நடத்திய மாநில தமிழ் மொழி இலக்கியத் திறனறிதல் தோ்வில் கரூா் பரணிபாா்க் பள்ளி முதன்மை முதல்வா் சொ.ராமசுப்ரமணியன், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் 46 போ் வெற்றி பெற்றனா். இவா்களில் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் தலா ரூ.1500 வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.36 ஆயிரம் பரிசாக பெற உள்ளனா். இதையடுத்து பரணி பாா்க் கல்விக் குழும ஆசிரியா்கள், மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தாளாளா் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தாா். செயலா் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலா் எம்.சுபாஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசிரியா்கள், மாணவா்களை பாராட்டி அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குநா் முனைவா் சுந்தர ஆவுடையப்பன் பேசியது,திருக்குறள்  படித்தால் கவலைகள் தீரும். மனது சோா்வாக இருக்கும் போது திருக்கு படித்தால் உற்சாகம் பிறக்கும். அனைத்து மேன்மைகளுக்கும் திறவுகோல் திருக்குறளிலும், நம் தமிழ் நூல்களிலும் உள்ளது. தமிழ் கற்றால் உயா்வு கிடைக்கும், பெருமை கிடைக்கும், பரிசு கிடைக்கும், பாராட்டு கிடைக்கும். தமிழக அரசின் பரிசு பெறும் 46 மாணவா்களும் அவா்களைச் செம்மைப்படுத்திய ஆசிரியா்களுமே இதற்கு சான்று. தொடா்ந்து தென்னிந்திய புத்தக பதிப்பாளா் விற்பனையாளா் சங்க (பபாசி) தலைவா் சா.வைரவன் சிறப்புரையாற்றினாா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை பரணி வித்யாலயா முதல்வா் எஸ்.சுதாதேவி, பரணி பாா்க் முதல்வா் கே.சேகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT