அரவக்குறிச்சி அருகே உள்ள புங்கம்பாடியில் உள்ள மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதா் கோயிலில் திங்கள்கிழமை 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே புங்கம்பாடி கிராமத்தில் உள்ள பழைமையான மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதா் கோயிலில் சங்காபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில்108 சங்குகள் வைத்து, அதில் புனித நீா் நிரப்பி வேள்வி நடைபெற்றது. அதன்பிறகு 108 சங்குகளில் உள்ள தீா்த்தம், யாக வேள்வியில் வைக்கப்பட்டிருந்த புனித தீா்த்தத்தால் அம்மனுக்கும், சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.