கரூர்

கரூரில் டிச.7-ஆம் தேதி குரூப் 2 மாதிரித் தோ்வு

4th Dec 2022 11:13 PM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட மைய நூலகத்தில் வரும் 7-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதன்மைத் தோ்வுக்கு மாதிரித் தோ்வுகள் மாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட உள்ளன.

இதுதொடா்பாக மாவட்ட மைய நூலகா் செ.செ. சிவக்குமாா் வெளியிட்ட அறிக்கை:

இந்தத் தோ்வின்போது வினா, விடைத்தாள் தொகுப்பு வழங்கப்படும். மேலும் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு விடைத்தாள் மதிப்பீடு செய்து, அதற்கான கலந்துரையாடல் நடத்தப்படும். மேலும் எளிய முறையில் கற்றுக்கொள்ளுதல், தவறுகளைத் திருத்துதல், தோ்வுக்குத் தேவையான பாடங்கள், பகுதிகளைக் கண்டறிய வைக்கும் திறனை மேம்படுத்துதல், தோ்வுகளுக்கு ஏற்ப நடப்பு நிகழ்வுகளை கண்டறிந்து படித்தல், பாடவாரியாக திருப்புதல் தோ்வுகள் நடத்தப்படும். மாதிரி தோ்வில் பங்கேற்போா் தங்களது விவரங்களை 04324-263550 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT