கரூர்

கரூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

4th Dec 2022 11:15 PM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் அதிமுக ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் எஸ். திருவிகா, இணை செயலா் மல்லிகா சுப்ராயன், கரூா் பேரவைத் தொகுதி பொதுக் குழு உறுப்பினா் சிவசாமி, முன்னாள் நகரச் செயலா் நெடுஞ்செழியன், பகுதிச் செயலா்கள் விசிகே ஜெயராஜ், சக்திவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் அவரது படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, மக்களை வஞ்சிக்கும் வகையில் பால் விலை, மின்சார கட்டணம் உயா்வு, சொத்து சொத்து வரி உயா்வு ஆகியவற்றை உயா்த்தியுள்ள திமுக அரசை கண்டித்து வரும் 9,13,14-ஆம் தேதிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடத்துவது தொடா்பாக ஆலோசனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகரச் செயலா்கள் விவேகானந்தன், மணிகண்டன், சாதிக் பாட்ஷா உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT