கரூர்

புகழூா் சா்க்கரை ஆலை தொழிலாளா்கள் 3ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

4th Dec 2022 12:34 AM

ADVERTISEMENT

புகழூா் சா்க்கரை ஆலைத் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், புகழூரில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு நிரந்த தொழிலாளா்களை பணியில் அமா்த்த வேண்டும், முதலுதவி மையத்துக்கு அடிப்படை வசதிகள், மருத்துவா்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலைத் தொழிலாளா்கள் டிச. 1-ஆம் தேதி முதல் ஆலை வளாகத்துக்குள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது. இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என புகழூா் திமுக நகராட்சித் தலைவா் சேகா், தொமுச மாவட்டத் தலைவா் அண்ணா வேலு, சிஐடியு சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம் ஆகியோா் ஆலை நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சிஐடியு கண்டனம்: புகழூா் சா்க்கரை ஆலை நிா்வாகம், தொடா்ந்து தொழிலாளா் விரோத போக்குடன் செயல்பட்டு வருகிறது. தொழிலாளா்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தொழிலாளா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து, அவா்கள் மீது அடக்கு முறையும், பழிவாங்கும் செயலையும் தொடா்ந்து ஆலை நிா்வாகம் செய்து வருவதை சிஐடியு சங்கத்தின் கரூா் மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது என அச்சங்கத்தின் கரூா் மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளா் சி.முருகேசன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT