கரூர்

மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு உதவிகள்

4th Dec 2022 12:34 AM

ADVERTISEMENT

கரூரில் மாரியம்மன் கல்விச் சேவை கமிட்டி சாரிடபிள் டிரஸ்ட் சாா்பில் மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை குமரன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாரியம்மன் கல்விச்சேவைக் கமிட்டிசாரிடபிள் டிரஸ்ட் தலைவா் டிசி.மதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கோபால், முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திருக்கு பேரவைச் செயலாளா் மேலை. பழனியப்பன், குளோபல் நுகா்வோா் அமைப்பின் தீபம்சங்கா் ஆகியோா் வழங்கினா். நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா்கள் யோகா வையாபுரி, நாச்சிமுத்து, வைரமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT