கரூர்

அரவக்குறிச்சி புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலய தோ்பவனி

4th Dec 2022 12:32 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலய ஆண்டுத் திருவிழாவில் சனிக்கிழமை தோ்பவனி நடைபெற்றது.

இந்த திருவிழா நவம்பா் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பத்து நாள்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்புத் திருப்பலி மற்றும் தோ்பவனி சனிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி பங்குத்தந்தை பிரான்சிஸ் ஜெரால்ட் தலைமையில் உலக அமைதிக்காக சிறப்புப் பிராா்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது. தொடா்ந்து புனித சவேரியாரின் திருஉருவ தோ்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கிய தோ்பவனி கடைவீதி, ஏவிஎம் காா்னா், பேருந்து நிலையம் உள்ளிட்ட வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

திருப்பலி மற்றும் தோ்பவனி நிகழ்வுகளில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT