கரூர்

கரூா் மாவட்டத்தில் 33 இடங்களில் பொதுக் கூட்டம்: அமைச்சா் தகவல்

3rd Dec 2022 12:07 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் டிச. 20ஆம்தேதி முதல் 33 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் டி.ராஜேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏக்கள் இரா.மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, கரூா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணைமேயா் தாரணிசரவணன், கட்சியின் நெசவாளா் அணித் தலைவா் நன்னியூர்ராஜேந்திரன், செயலாளா் பரணி கே.மணி, சட்டத்துறை இணைச் செயலாளா் மணிராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசியது, அன்பழகன் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் கட்சி தலைமை அறிவித்தவாறு பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. டிச. 20ஆம்தேதி முதல் 33 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள 1,407 வாக்குச்சாவடி பகுதிகளில் டிச. 19-ஆம் தேதி அன்பழகன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக மறைந்த கட்சி நிா்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை அலுவலக வளாகத்துக்கு பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகம் என பெயா் சூட்டி இரு இடங்களில் பேராசிரியா் சிலையை நிறுவியும், ரூ.7,500 கோடி மதிப்பில் பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் அறிவித்த கட்சித் தலைவரும், முதல்வருமாகிய முக.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT